தற்காப்பு என்பது உயிரின் இயற்கை ! நோய்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல், சுற்றுச்சூழல் இடர்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல், சக உயிர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என தற்காப்பு செயல்பாடுகள் வரிவடைகின்றன.
விலங்குகள் வேட்டையாடும் முறைகளிலிருந்தும், ஒன்றோடொன்று போரிட்டுக்கொள்ளும் முறைகளிலிருந்தும் தற்காப்புக்கலை உருவானது. மனித சமூகத்தின் முதல் கலையே தற்காப்புக்கலை எனலாம். அதேபோல் கலையின் தன்மையையும், விளையாட்டின் தன்மையையும் கொண்டுள்ள தற்காப்புகலையில், தொன்மையின் தொடர்ச்சியையும் நவீனத்தையும் வளர்ச்சியும் காணலாம்.